உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே திறக்கப்படாதநகர்ப்புற சுகாதார நிலையம்

கரூர் அருகே திறக்கப்படாதநகர்ப்புற சுகாதார நிலையம்

கரூர் அருகே திறக்கப்படாதநகர்ப்புற சுகாதார நிலையம்கரூர்,:கரூர் அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டடத்தை (சுகாதார நிலையம்) திறக்காததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.கரூர் மாநகராட்சி, 1 வது வார்டு பெரிய கோதுார் வடிவேல் நகரில், ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், சமீபத்தில் பல லட்ச ரூபாய் செலவில், புதிய நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால், திறக்கப்படாமல் உள்ளது. இதனால், கட்டடத்தின் முன் பகுதியில், முட்புதர்கள் முளைத்துள்ளன. மேலும் கட்டடத்தின் சுவர்கள், மின் இணைப்புகள் சேதமடையும் அபாயம் உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, புதிய நகர்ப்புற சுகாதார நிலையத்தை திறந்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை