உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சார போர்டுகள் சேதம்பொதுமக்கள் கடும் அவதி

மின்சார போர்டுகள் சேதம்பொதுமக்கள் கடும் அவதி

மின்சார போர்டுகள் சேதம்பொதுமக்கள் கடும் அவதிகரூர்:கரூர அருகே, சேதமடைந்த குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார் சுவிட்ச் பெட்டிகளை சீரமைக்க வேணடும்.நெரூர் வடக்கு பஞ்சாயத்து மறவாப்பாளையம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும், பொதுமக்கள் வசதிக்காக பஞ்சாயத்து சார்பில், குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக குழாயில் தண்ணீரும் சரிவர வருவது இல்லை. மின் மோட்டார் மற்றும் போர்வெல் குழாய்களும் சேதமடைந்துள்ள தால், நிலத்தடி நீரையும் பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை.மின் மோட்டாரை இயக்க, அமைக்கப்பட்ட சுவிட்ச் போர்டுகளும் சேதமடைந்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரையும் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, சேதமடைந்த போர்வெல் குழாய், மின்சார சுவிட்ச் போர்டுகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ