உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பங்குனி உத்திர திருவிழாஉற்சவர் திருவீதி உலா

பங்குனி உத்திர திருவிழாஉற்சவர் திருவீதி உலா

பங்குனி உத்திர திருவிழாஉற்சவர் திருவீதி உலாகரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று திருவீதி உலா நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை உற்சவர் சந்திரசேகர், நந்தி வாகனத்திலும், ஆனந்த வள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 8ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபி ேஷகம், 9 ல் திருக்கல்யாண உற்சவம், 11 ல் தேரோட்டம், 12 ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !