மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைப்பு பணி தீவிரம்
04-Apr-2025
கரூர் அருகே உடைந்தகுடிநீர் குழாய் சீரமைப்புகரூர்:கரூர் மாநகராட்சி பகுதியில், பல இடங்களில் அடிக்கடி குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களில் மட்டும், குடிநீர் சாலையில் செல்வதால், மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை கண்டு கொள்வது இல்லை. இந்நிலையில், சமீபத்தில் கரூர் அருகே தெரசா கார்னர்-கொளந் தானுார் சாலை கால்நடை மருத்துவமனை அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் பலமணி நேரம் வீணாக சாலையில் ஆறு போல ஓடியது.இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், பள்ளம் தோண்டி உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாக சாலையில் செல்வதை தடுத் தனர். இதனால், கொளந்தாகவுண்டனுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
04-Apr-2025