வாய்க்காலில் ஆகாயத்தாமரைபாசன நீர் செல்வதில் தாமதம்
வாய்க்காலில் ஆகாயத்தாமரைபாசன நீர் செல்வதில் தாமதம்கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம், பாசன வாய்க்காலில் அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதால், பாசன நீர் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் இருந்து, பிள்ளபாளையம் பகுதி வரை பாசன வாய்க்கால் செல்கிறது. பாசன வாய்க்கால் செல்லும் தண்ணீர் மூலம் விவசாயிகள் வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பாசன வாய்க்காலில், தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு குறைந்தளவே செல்கிறது. இதனால் வாழை, வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் குறைந்து செல்வதால், பயிர்கள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பாசன வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நீர்வளத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.