உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்குகரூர் வழியாக ராமபக்தர் பாதயாத்திரை

ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்குகரூர் வழியாக ராமபக்தர் பாதயாத்திரை

கரூர்,:ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம் செனி என்பவர் ராமபக்தர். இவர், ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை செல்ல பாதயாத்திரையை கடந்த மார்ச், 22-ல் கன்னியாகுமரியில் தொடங்கினார். ராமேஸ்வரம், மதுரை வழியாக நேற்று முன்தினம் கரூர் வந்தடைந்தார். அவருக்கு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ராம பக்தர்கள் தங்குவதற்கு இடம், உணவு கொடுத்து உபசரித்தனர். நேற்று காலை வழிபாடு நடத்தி விட்டு, கரூரிலிருந்து வழி அனுப்பி வைத்தனர். தினமும், 35 கி.மீ., பாதயாத்திரை செல்லும் அவர், மாவட்டம் வாரியாக தங்கி ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் புறப்பட்டு செல்கிறார். நாட்டு நலன் வேண்டி பாதயாத்திரை செல்வதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !