உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடுதல் தெருவிளக்கு கேட்டு பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடுதல் தெருவிளக்கு கேட்டு பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர், கரூர் அருகில், ஈசநத்தம் செல்லும் சாலையில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டியிலிருந்து ஈசநத்தம், பாகநத்தம், திண்டுக்கல் சாலை செல்கிறது. கரூரில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள், இந்த சாலையில் செல்கின்றன. கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து, பத்தாம்பட்டி பிரிவு சாலை வரை கும்மிருட்டாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர், அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பிரிவு சாலையில் நின்று, அந்த வழியாக வரும் பஸ்களில் ஏறி செல்லும் போது, மின் வெளிச்சம் குறைவு காரணமாக சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, சாலையில் குறிப்பிட்ட துாரம் வரை கூடுதலாக மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை