உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்::பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் கலெக்டர் அலுவலகம் முன், டாஸ்மாக் அனைத்து தொழிலாளர் சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தொ.மு.ச., மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை வகித்தார். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில், பணியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் மாற்று பணி வழங்க வேண்டும். காலி பாட்டில் சேகரிக்கும் பணியை, கடை ஊழியர்கள் மீது சுமத்தக் கூடாது. கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வாடகை, மின் கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் அப்பாசாமி, சுடர்வளவன், ராமலிங்கம், மாயவன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை