உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு

நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு

குளித்தலை:குளித்தலையில், நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.குளித்தலை நகராட்சி சுங்ககேட் முதல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கடம்பர் கோவில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம், உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், பெரிய பாலம் வரை கரூர் - திருச்சி நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மளிகை கடைகள், ஹோட்டல், தனியார் வங்கிகள், வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள், மருத்துவமனை உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.போதிய இட வசதி இல்லாததால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார். சரக்கு வாகனங்கள், பொருட்களை இறக்க வரும் லாரிகள் நெடுஞ்சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள், நடந்து செல்வோர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.நெடுஞ்சாலையில் இயங்கும் அனைத்து வகையான கடைகள், நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை நெடுஞ்சாலையில் நிறுத்துவதை தடை செய்ய, போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ