பொறுப்பேற்பு பொறுப்பேற்பு
குளித்தலை:குளித்தலையில் செயல்பட்டு வரும், நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளராக வெங்கடேசன் பொறுப்பேற்று கொண்டார். இவர், கும்பகோணம் சிறப்பு திட்ட உபகோட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளராக இருந்து, பதவி உயர்வுடன் செயற்பொறியாளராக பொறுப்பேற்று கொண்டார். இங்கு பணியில் இருந்த கோபி கிருஷ்ணன், திருச்சி அரியாறு வடிநிலம் உபகோட்ட உதவி செயற்பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.