உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவாப்பூர் ரேஷனில் 5 ஆண்டுக்கு பின்பயோ மெட்ரிக் மூலம் பொருள் சப்ளை

சேவாப்பூர் ரேஷனில் 5 ஆண்டுக்கு பின்பயோ மெட்ரிக் மூலம் பொருள் சப்ளை

சேவாப்பூர் ரேஷனில் 5 ஆண்டுக்கு பின்'பயோ மெட்ரிக்' மூலம் பொருள் 'சப்ளை'கரூர்:கரூர் மாவட்டத்தில், மூன்று லட்சத்து, 32,076 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தில், இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், 408 முழு நேர ரேஷன் கடைகள், 229 பகுதிநேர ரேஷன் கடைகள் என, மொத்தம், 637 ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்று வருகின்றனர். இதில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.முதலில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. கடந்த, 2020 முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். அவர்கள் ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவியில் தங்களது கைரேகையை பதிவு செய்த பிறகே பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஆனால், கரூர் மாவட்டத்தில், கடவூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட சேவாப்பூரில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 537 கார்டுதாரர்கள் உள்ளனர். மாவட்டத்தில் எல்லை பகுதியாக, மலை நிறைந்த பகுதியாக இருப்பதால், இணையதள வசதி கிடைப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இங்கு, பழைய ரேஷன் முறைப்படி பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், இந்த ரேஷன் கடையில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் பயோமெட்ரிக் வாயிலாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் ஆய்வு செய்தார். பயோ மெட்ரிக் முறை, மாவட்டம் முழுவதும் அமல்படுத்தி, ஐந்தாண்டுகளுக்கு பின், இந்த கடையில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை