மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் சாலையை கரூர் டி.ஆர்.ஓ., ஆய்வு
23-Aug-2024
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் பஞ்சாயத்து பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால், இரவில் மக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் பஞ்., பகுதிகளான கரூர் - திருச்சி நெடுஞ்சாலை, மீன் விற்பனை செய்யப்படும் காவிரி கத-வணை சாலை, ரயில்வே கேட் சாலை ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவ்வப்-போது சாலையில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்-வோரை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கதிகலங்கி கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் தடுமாறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம் தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
23-Aug-2024