தமிழாய்வு துறை சார்பில் கருத்தரங்கம்
கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், தமிழாய்வு துறை சார்பில், கல்-லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.அதில், நுாலகங்களின் பயன்பாடுகள், நாள்தோறும் புத்தகங்-களை மாணவ, மாணவிகள் படிப்பதன் அவசியம், தமிழ் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி தமிழாய்வு துறை தலைவர் கண்ணன் விளக்கம் அளித்து பேசினார்.அப்போது, கல்லுாரி தேர்வு நெறியாளர் கற்பகம், தமிழாய்வு துறை இணை பேராசிரியர்கள் கண்ணுமுத்து, சரவணன், சுப்பிர-மணி, சுந்தரம் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.