உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவை மையங்களில் தனி குறியீட்டு எண்கள் பெற பதிவு செய்யலாம்

சேவை மையங்களில் தனி குறியீட்டு எண்கள் பெற பதிவு செய்யலாம்

கரூர்: மத்திய, மாநில அரசு களின் திட்டங்களில் பயன்பெற, விவசாயிகளுக்கு வேளாண் அடுக்ககம் திட்டம் மூலம், தனி குறியீட்டு எண்கள் பெற, பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களை விண்ணப்பிக்-கும்போது, ஒவ்வொரு முறையும் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. அதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட வேளாண் அடுக்ககம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்களையும் இணைக்கும் பணி, சம்பந்-தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடக்கிறது. இவ்வாறு பதிவு செய்-வோருக்கு, தேசிய அளவிலான அடையாள எண் வழங்கப்படும்.இதன்மூலம் பி.எம். கிசான் சம்மன் நிதி, பிரதமர் காப்பீடு உள்-பட மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு எளிதில் விண்ணப்-பிக்கலாம். வேளாண்துறை, தோட்டக் கலைத்துறையால் நடத்தப்-படும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம். தற்-போது, பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இதனை பதிவு செய்ய வரும், 31ம் தேதி இறுதி நாளாகும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை