பேராளகுந்தாளம்மன்கோவில் விழா நிறைவு
பேராளகுந்தாளம்மன்கோவில் விழா நிறைவு குளித்தலை: குளித்தலை, பஸ் ஸ்டாண்டின் அருகே அமைந்துள்ள பேராளகுந்தாளம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 12ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் பூச்சொரிதல், பால்குடம் விழா மற்றும் திருத்தேர் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 19ல் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி, 20ல் சுவாமி கிராமம்தோறும் பூஜை வாங்கும் நிகழ்ச்சி, 21ல் மாவிளக்கு பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று, வாண வேடிக்கையுடன் சுவாமி குடிபுகுதல், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.