உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்குளித்தலை::குளித்தலை அடுத்த வீரகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியம்மாள், 65; கூலித்தொழிலாளி. இவரது மகள் செல்வராணி, 35; வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 10ல் பெரியம்மாள், நிலப்பிரச்னை சம்பந்தமாக குளித்தலை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றிருந்தார். பின், மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. உறவினர்களிடம் விசாரித்தும், செல்வராணி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி, பெரியம்மாள் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை