உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சங்கடஹர சதுர்த்திவிநாயகர் கோவிலில் வழிபாடு

சங்கடஹர சதுர்த்திவிநாயகர் கோவிலில் வழிபாடு

சங்கடஹர சதுர்த்திவிநாயகர் கோவிலில் வழிபாடுகரூர்:சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கரூரில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கரூர் மினி பஸ் ஸ்டாண்ட் அருகில், ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில், சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. நொய்யல் அருகே முத்தனுார் வருண கணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.அதேபோல், சேமங்கி, நொய்யல் அத்திப் பாளையம், புன்னம், உப்புபாளையம், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்செய்புகழூர், திருகாடுதுறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள, விநாயகர் கோவில்களிலும், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி