உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயம்: போலீசில் தந்தை புகார்

மாயம்: போலீசில் தந்தை புகார்

மாயம்: போலீசில் தந்தை புகார்கரூர்:கரூர் அருகே, இளம் பெண் குழந்தையுடன் காணவில்லை என, பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெங்கமேடு வெண்ணைமலை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் மதுமிதா, 24; இவருக்கும், ஆடம் ஜோன்ஸ் என்பவருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுமிதா, கணவர் ஆடம் ஜோன்சுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை செல்வம் வீட்டில், சில மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2 ல் வீட்டில் இருந்து, பெண் குழந்தை கவுசல்யா, 3;வுடன் வெளியே சென்ற மதுமிதா திரும்பி வரவில்லை. இதுகுறித்து, மதுமிதாவின் தந்தை செல்வம் போலீசில் புகார் செய்தார்.வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை