உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூரியகாந்தி அறுவடை பணிகளில் மும்முரம்

சூரியகாந்தி அறுவடை பணிகளில் மும்முரம்

கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், சூரியகாந்தி அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, வயலுார், சிவாயம், சிந்தலவாடி, சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வளர்ச்சி கண்டுள்ள சூரியகாந்தி விதைகளை, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவ்வப்போது மழை பெய்வதால், சூரியகாந்தி பூக்களை வெயிலில் உலர்த்துவதில் சிரமம் ஏற்படுகிறது. கிருஷ்ணராயபுரம் பகுதியில், 50 ஏக்கர் பரப்பரவில் அறுவடை பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி