மேலும் செய்திகள்
விளையாட்டு மைதானம் அருகே ஆபத்தான மின் இணைப்பு
20-Sep-2025
ஈரோடு:'பருவமழை துவங்குவதால், மின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்' என, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வேண்டுகோள்விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர்கள் மூலமே செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். மின்சார பிளக் பயன்பாட்டின்போது சுவிட்சை, 'ஆப்' செய்து பயன்படுத்துங்கள். ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் சாக்கெட் உள்ள பிளக் மூலம் இணைப்பு வழங்குங்கள். எர்த் பைப் சரியான இணைப்பு வழங்குங்கள். அதை குழந்தைகள், விலங்குகள் தொடாதபடி பராமரிக்க வேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை ஒயரிங்களை சோதனை செய்யுங்கள்.மின் கம்பம், அதை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பத்துடன் இணைத்து பந்தல் போடக்கூடாது. மழை, காற்றால் மின் கம்பி அறுந்தால் அருகே செல்லக்கூடாது. மின் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின்போது ஜன்னல், கதவுகள் அருகே இருக்க கூடாது. மின்னகத்துக்கு - 94987 94987, வாட்ஸ் ஆப் எண் - 94458 51912 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
20-Sep-2025