கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சரவணபுரம், பாப்-பகாப்பட்டி, வயலுார், குழந்தைப்பட்டி, சிவாயம், வேப்பங்-குடி பகுதிகளில் பரவலாக கொத்தமல்லி சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வெயில் அதிகம் இருப்பதால் செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. கொத்த-மல்லி செடி பறிக்கப்பட்டு கட்டுகளாக கட்டி, உள்ளூர் வாரச் சந்தைகளில் விற்கின்றனர். கொத்தமல்லி கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.