உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரன்பட்டி, கருப்-பத்துார், கள்ளப்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்னனர். வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், பூவன் வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்கப்-பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர்வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை