ஓட்டுப்பதிவு தொடர்பாக விழிப்புணர்வு கையெழுத்து
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு கையெ-ழுத்து இயக்கம் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். நான்கு தொகுதிகளிலும், பொது தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 23ல் நடக்கிறது. 100 சதவீதம் ஓட்டு குறித்து துண்டு பிரசு-ரங்கள், பேரணி, கோல போட்டி, வாக்காளர் உறுதிமொழி ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.இதில், தேர்தல் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு கையெ-ழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்பு-ணர்வு சுய புகைப்பட பதாகையில், பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மனோகரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.