மேலும் செய்திகள்
கோடையை முன்னிட்டு வெள்ளரி விற்பனை ஜோர்
26-Mar-2026
கிருஷ்ணராயபுரம் ::கிருஷ்ணராயபுரம் பகுதியில், வெண்டைக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், கோவக்குளம், சிவாயம், பஞ்சப்பட்டி, கீரனுார், கொசூர், தொண்டமங்கிணம், நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது விளைச்சல் கண்டுள்ள வெண்டைக்காய்களை, கூலி தொழிலாளர்கள் கொண்டு பறிக்கப்படுகின்றன.இவை உள்ளூர் வாரச்சந்தை மற்றும் கரூர், குளித்தலை மொத்த காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
26-Mar-2026