சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டுகோள்
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார், மேட்டு மருதுார் சாலையின் இரு பகுதிகளிலும் தானாக வளர்ந்த வேப்ப மரம், அரசமரம் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகம் மூலம் வளர்க்கப்பட்ட பனை மரங்கள் உள்ளிட்டவை வளர்ந்து, பொது மக்களுக்கு பயன் அளித்து வருகிறது. இதில் வேப்ப மரங்களை சிலர் வெட்டி சேதம் செய்து வருகின்றனர். தானாக வளர்ந்த மரங்களை பொதுமக்கள் யாரும் சேதம் செய்யாத வகையிலும், ஆக்கிரமிப்பு செய்யாத வகையிலும், மரங்களை டவுன் பஞ்., நிர்வாகம் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சாலையோர மரங்கள் அனைத்தும் பஞ்சாயத்துக்கு சொந்தம் என்பதை உறுதி செய்யும் வகையில், மரங்களுக்கு வரிசை எண் போட்டு பராமரிக்க வேண்டும் என விவசாயிகள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.