உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது தொடர்பாக, துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், துாய்மை பாரத இயக்கம் வழியாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த ஏப்ரல் முதல் ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கவனக் கழிவு என நான்கு வகைகளாக பிரிக்கும் பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.இதன் தொடர்ச்சியாக, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகளை முறையாக தரம் பிரிப்பது குறித்து துாய்மை பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊக்குனர்கள் மற்றும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலசுப்ரமணி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலாளர்கள், ஊக்குனர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை