உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வட்டாரத்தில் 2 வது நாளாக மழைகோவை சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்

கரூர் வட்டாரத்தில் 2 வது நாளாக மழைகோவை சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்

கரூர் வட்டாரத்தில் 2 வது நாளாக மழைகோவை சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய மழை பெய்தது. கோவை சாலையில், மழை நீர் ஆறு போல ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.பூமத்திய ரேகையையொட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை, கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. அதேபோல், நேற்று காலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. பிறகு மதியம், 12:30 மணி முதல், 1:00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது.இதனால் கோவை சாலை, தெரசா கார்னர், பழைய அரசு மருத்துவமனை சாலை, திருகாம்புலியூர், சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய பகுதிகளில், மழைநீர் ஆறு போல ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 6.20, அரவக்குறிச்சி, 13.60, அணைப்பாளையம், 32.40, க.பரமத்தி, 19.90, குளித்தலை, 4.80, தோகமலை, 3, கிருஷ்ணராயபுரம், 8.50, மாயனுார், 8.40, பஞ்சப்பட்டி, 17.40, கடவூர், 12, பாலவிடுதி, 15 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 11.76 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி