உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில்23ல் வலிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்

கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில்23ல் வலிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்

கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில்23ல் வலிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்கரூர்:கரூர் - கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில், கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில், வரும், 23 காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை, வலிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: வலிப்பு நோய் என்பது, மூளையில் ஏற்படும் ஒரு நரம்பியல் நோயாகும். உலகம் முழுவதும், ஐந்து கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்த நோய் உள்ளது.வலிப்பு நோய், மூளையில் ஏற்படும் சீரற்ற, அசாதாரண மின்னதிர்வுகளால் வருகிறது. 70 சதவீத வலிப்பு நோய்கள், மருந்துகளாலேயே குணப்படுத்திவிடலாம். வலிப்பு நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், வீடியோ இ.இ.ஜி., கருவி வசதி உள்ளது. கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் உள்ளவர்கள், இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர்கள் ராஜேஷ்சங்கர் ஐயர் மற்றும் அவரது குழுவினர், நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி, சிகிச்சை முறைகளை பரிந்துரைக்கின்றனர். முகாமில் பங்கேற்க, 7339333485 என்ற மொபைல் போன் எண்ணில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ