உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மோதி விவசாயி பலி

பைக் மோதி விவசாயி பலி

கரூர்: கரூர் அருகே, பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், நொய்யல் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்-தவர் பழனிசாமி, 53; இவர், நேற்று முன்தினம் கரூர்-ஈரோடு சாலை புன்னம் சத்திரம் பகுதியில், நடந்து சென்று கொண்டி-ருந்தார்.அப்போது, திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த செல்வம், 39; என்பவர் ஓட்டி சென்ற ேஹாண்டா சைன் பைக், பழனிசாமி மீது மோதியது. அதில், கீழே விழுந்த பழனிசாமி, திருச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி