உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில் நுட்ப பயிற்சி

பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில் நுட்ப பயிற்சி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண விரி-வாக்க மையத்தில், நேற்று, அட்மா திட்டத்தின் கீழ் இரட்டை கலப்பின பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களும், மல்பெரி பயிரிடும் முறைகள் குறித்தும் பயிற்சி நடந்தது. வட்-டார வேளாண்மை அலுவலர் சிரஞ்சீவி தலைமையேற்று, வேளாண்மைத்துறையின் திட்டங்கள், உயிர் உரங்கள் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.சேலம் மண்டல பட்டுப்புழு வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய விஞ்-ஞானி தாஹிராபீவி, இயற்கை உரங்கள், உயிர் உரம், பட்டுப்புழு வளர்ப்பில் ரசாயன உரங்கள் பயன்பாடு, பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள், மல்பெரி தோட்டம் பராமரிப்பு முறைகள் மற்றும் மனைகள் பராமரிப்பு மனையில் ஈரப்பதம், வெப்பநிலை பராமரிப்பு, கிருமி நீக்கம் செய்தல், பால்புழு கரும்-புழு, நோய், வேர் அழுகல் நோய் ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் அதன் தடுப்பு முறைகள், புழு வளர்ப்பு மனையில் படுக்கை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், இளம்புழு மற்றும் முதிர்புழு வளர்ப்பு, மூன்றாம் பருவத்தின் முக்கி-யத்துவம் பற்றி தெளிவாக விளக்கமளித்தார்.பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் தேன்மொழி, பட்டுவ-ளர்ப்பின் முக்கியத்துவம், பட்டுவளர்ச்சி துறை மூலம் வழங்கப்-படும் மானிய திட்டங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, இளநிலை ஆய்வாளர்கள் கவு-சல்யா, செந்தமிழ்ச்செல்வி மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ