உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

கரூர்: மாநகராட்சியுடன் இணைப்பை கைவிட வேண்டும் என, ஆண்-டாங்கோவில் கிழக்கு பஞ்., கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலு-வலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி-மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து உள்ளது. கரூர் மாநகராட்சி பகுதியை ஓட்டி இருந்தாலும், கிராம பகுதி கள் நிறைந்த பஞ்சாயத்தாக உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் உள்பட மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கிராம திட்டங்களில் மூலம் பயன் பெற்று வருகிறோம். தற்போது கரூர் மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அரசு கிராமப்புறங்களுக்கு வழங்கும் சலுகை கள் இழக்க நேரிடும். ஊரக வேலை உறுதி திட்டம் நிறுத்தப்பட்டு வாழ்வதாரம் பாதிக்கப்படும். எனவே, மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி