மேலும் செய்திகள்
ஈரோடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு
14-Aug-2024
கரூர், ஆக. 29-க.பரமத்தி அருகே, கற்கள் பெயர்ந்த நிலையில் மண் சாலை உள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். க.பரமத்தி பஞ்., யூனியன், நெடுங்கூர் கிராமத்தில் காரப்பாலி முதல் நிமிர்த்தபட்டி வரை, 1,500 மீட்டர் தொலைவில் சாலை சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் கோரிக்கைபடி கடந்தாண்டு ஊரக வளர்ச்சி துறை மூலம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 4.19 லட்ச ரூபாய் செலவில் மண் சாலை மேம்படுத்தப்பட்டது. ஆனால், மண் சாலை தற்போது கற்கள் பெயர்ந்துள்ளதால், பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.மேலும், இந்த சாலை பவித்திரம், காருடையாம்பாளையம், நெடுங்கூர், அணைப்பாளையம், ஆரியூர் ஆகிய பஞ்சாயத்துக்களின் இணைப்பு சாலையாக உள்ளது. எனவே, கற்கள் பெயர்ந்துள்ள மண் சாலையை, க.பரமத்தி பஞ்., யூனியன் நிர்வாகம் சீரமைக்க வேண்டியது அவசியம்.
14-Aug-2024