சாலையில் வாகனங்களைநிறுத்துவதால் நெரிசல்
சாலையில் வாகனங்களைநிறுத்துவதால் நெரிசல்கரூர்:க.பரமத்தி அருகில், தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கரூர்-கோவை நெடுஞ்சாலைக்கு வந்து, பஸ் ஏறி கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதில் ஏராளமானோர், இரு சக்கர வாகனங்களில் கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.தினமும் காலை, மாலை வேளைகளில் கடைவீதியில் உள்ள தனியார் ஓட்டல்கள், டீ கடைகள் முன்புறமும், நெடுஞ்சாலையின் இரு புறமும் நான்கு சக்கர ஜல்லி லாரிகளை ஓட்டுனர்கள் நிறுத்தி விட்டு உணவு விடுதிக்கு செல்கின்றனர். சில மணி நேரம் கழித்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது.போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.