உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமி மாயம்போலீசார் தேடல்

சிறுமி மாயம்போலீசார் தேடல்

சிறுமி மாயம்போலீசார் தேடல்குளித்தலை: குளித்தலை, மீன்கார தெருவை சேர்ந்தவர் பெரியக்காள், 32; இவரது அக்கா மகள் தீபிகா, 14, ஆகிய இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த மார்ச், 31 வீட்டிலிருந்து, கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள், தோழிகள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல் போன தன் அக்கா மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என, பெரியக்காள் அளித்த புகார்படி, குளித்தலை போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை