உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் வெண்டைக்காய் சாகுபடி

கிருஷ்ணராயபுரத்தில் வெண்டைக்காய் சாகுபடி

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, கோவக்குளம், வேப்பங்குடி, தேசியமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, கிணற்று நீர் பாசன முறையில் வெண்டைக்காய்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வெண்டைக்காய் பறிக்கப்பட்டு கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும், உழவர் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை