வெங்கமேடு சாலையில் வேன்கள், தள்ளுவண்டிகளால் விபத்து அபாயம்
கரூர்: வெங்கமேட்டில் சாலைகளில், தள்ளுவண்டிகள், வேன்களை நிறுத்தி வியாபாரம் செய்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கரூர்-சேலம் பழைய சாலை வெங்கமேட்டில், குளத்துப்பாளையம் சாலையில் தினசரி மார்க்கெட் செயல்படுகி-றது. அந்த பகுதியில், 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்-நிலையில் வெங்கமேடு சாலையில் வேன்கள், தள்ளுவண்டிகளில் பொருட்களை வைத்து பலர் வியாபாரம் செய்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வெங்கமேட்டில் சாலையின் குறுக்கே, தடுப்பு சுவர்கள் உள்ளதால், வாகனங்களால் எளிதாக செல்ல முடியவில்லை. எனவே, வெங்கமேடு சாலையில், வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.