உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரக்குத்தி கிராமத்தில் மல்பெரி சாகுபடி பயிற்சி

கோரக்குத்தி கிராமத்தில் மல்பெரி சாகுபடி பயிற்சி

கிருஷ்ணராயபுரம், ஆக. 25-கோரக்குத்தி கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் பட்டு வளர்ச்சி துறை சார்பில், மல்பெரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.பட்டு வளர்ச்சித்துறை உதவி பட்டு ஆய்வாளர் மோகன் தலைமை வகித்தார். பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டு புழு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மல்பெரியில் நோய் மேலாண்மை, களை கட்டுப்பாடு முறைகள், பயிர்கள் சாகுபடி, மல்பெரியை தாக்கும் பூச்சிகள், கட்டுப்படுத்தும் முறைகள், நிலம் தேர்வு செய்து மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.மேலும் பட்டு புழு வளர்ப்பு, மனை அமைப்பது, புழு வளர்ச்சி தாங்கிகள் அமைப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டது. பயிர் காப்பீடு குறித்தும் அதிக வருமானம் எடுப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டு ஆய்வாளர் ஆர்த்தி, கிருஷ்ணராயபுரம் வேளாண்மைத்துறை உதவி தொழில்நுட்ப மேலாளர் முரளிகிருஷ்ணன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரவின், சரண்யா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ