உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / . மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

. மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

கரூர்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நேற்று நடந்தது.அதில், முதல்வரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள், கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் புனரமைப்பு பணிகள், அம்ருத், 2.0 திட்டம், துாய்மை பாரத திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, பதிவு துறை தலைவரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ் பொன்ராஜ், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.ஆய்வு கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., விமல்ராஜ், முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா, மாநகராட்சி ஆணையாளர் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், குளித்தலை சப்-கலெக்டர் ஸ்வாதி ஸ்ரீ, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, பதிவு துறை தலைவரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை