உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மீது லாரி மோதி விபத்து செக்யூரிட்டி பலி; டிரைவர் சரண்

டூவீலர் மீது லாரி மோதி விபத்து செக்யூரிட்டி பலி; டிரைவர் சரண்

குளித்தலை: குளித்தலை அடுத்த பொய்யாமணி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 33; தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவர், நேற்று மதியம், 1:00 மணிக்கு, நண்பரின், 'ஹூரோ ஹோண்டா' டூவீலரில் லாலாப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, கருப்பத்துார் ஐயப்பன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் பலியானார்.லாலாப்பேட்டை போலீசார், கார்த்திக் உடலை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலியான கார்த்திக்கிற்கு, மனைவி நிஷா, இரண்டு குழந்தைகள் உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய, கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன், 52, குளித்தலை போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ