மேலும் செய்திகள்
ஆயத்த ஆடையகம் அமைக்க மானியத்துடன் அரசு நிதியுதவி
28-Aug-2024
கரூர்: 'பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டத்தின் கீழ், அயர்ன் பாக்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் திரவ பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி.,) மூலம் இயங்கும் அயர்ன் பாக்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவை தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, திட்டத்தின் மூலம், 1,200 பயனாளிகளுக்கு அயர்ன் பாக்ஸ் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்குட்பட்டவர்கள், விண்ணப்பங்களை, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-Aug-2024