உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 1,332 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மாவட்டத்தில் 1,332 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

கரூர், ''கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில், 1,332 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் கூறினார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தொகுதிகள் வாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டு சரிபார்க்கும் கருவிகளை ஒதுக்கீடு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் முன்னிலையில் நடந்தது.பின், அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டு சரி பார்க்கும் கருவிகளை, தொகுதி வாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில், 1,111 ஓட்டுப்பதிவு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக, 20 சதவீதம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு சரிபார்க்கும் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், 1,332 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 1,442 ஓட்டு சரிபார்க்கும் கருவிகள், 1332 கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டு சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சம்மந்தப்பட்ட தொகுதிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் மூலம் பாதுகாக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் விமல்ராஜ், தேர்தல் அலுவலர்கள் சுவாதி ஸ்ரீ, சக்தி பாலகங்காதரன், முருகேசன், சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை