முகாமில் ரூ.3.42 லட்சத்துக்குநலத்திட்ட உதவிகள் வழங்கல்
| ADDED : மார் 20, 2025 01:12 AM
கரூர்,9கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். அதன்பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமானது, மண்மங்கலம் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்., வேலாயுதம்பாளையத்தில், கரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணி, வாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 7.46 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணி நடக்கிறது. இவ்வாறு கூறினார்.தொடர்ந்து, 32 பயனாளிகளுக்கு, 3.42 லட்சம் ரூபாய் -மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆய்வின் போது டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.