குரூப் 4 தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்பு 30ல் துவக்கம்
குரூப் 4 தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்பு 30ல் துவக்கம்கரூர்:டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30ல் தொடங்குகிறது.கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள, வி.செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் அதன் அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30ல் தொடங்குகிறது. இலவச புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வீக்எண்ட் வகுப்புகள் நடக்கிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி கேள்விகள் கொடுக்கப்படும். 50க்கும் மேற்பட்ட பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். இதில், கலந்து கொள்ள விரும்புவோர், 81481 92175 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவல், வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.