உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அய்யர்மலை ரோப் கார் வல்லுனர் குழு இரண்டாவது முறை ஆய்வு

அய்யர்மலை ரோப் கார் வல்லுனர் குழு இரண்டாவது முறை ஆய்வு

குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர் கோவில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவில் செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டது. பக்தர்கள், குழந்தைகள், முதியோர் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாததால், கம்பி வட ஊர்தி (ரோப் கார்) அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 9.10 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கப்-பட்டு, கடந்த ஜூலை 24ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மறுநாள் அதிகளவு காற்று வீசி-யதால், ரோப்கார் கம்பி தடம் புரண்டு, பழுது ஏற்பட்டது. இதை-யடுத்து, 30ல், வல்லுனர் குழு ஆய்வு செய்தனர்.இந்நிலையில் நேற்று காலை, மீண்டும் ஹிந்து சமய அறநிலை துறை கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமகள், கண்கா-ணிப்பு பொறியாளர் சரவணன், சென்னை இந்திய தொழில் நுட்ப கழக (இந்திரவியல்) பேராசிரியர் சுந்தரராஜன், பேராசிரியர் சண்முக சுந்தரம், சென்னை தரமணி கட்டுமான ஆராய்ச்சி மைய பேராசிரியர் (ஓய்வு) பழனி, பழநி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, நாமக்கல் மின் ஆய்வாளர் பழனி-சாமி, பழனி தண்டாயுதபாணி கோவில் பொறியாளர் பார்த்-தீபன், சென்னை சேப்பாக்கம் திட்ட மற்றும் வடிவாக்கம் வட்டம் பொது பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மணி-கண்டன் ஆகியோர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, திருப்பூர் ஹிந்து சமய அறநிலைய துறை மண்டல ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் கூறுகையில்,'' ஆய்வில் வல்லுனர் குழு சில குறைகள், சில வசதிகளை சரி செய்யப்-பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து அர-சுக்கும், துறை அமைச்சருக்கும் அறிக்கை அனுப்புவர். மீண்டும் ரோப்கார் மக்கள் பயன்பாட்டுக்கு வருவது குறித்து அறிவிப்பர்,'' என்றார்.ரோப்கார் இன்ஜினியர் பெரியசாமி, செயல் அலுவலர்கள் அய்-யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் தங்கராஜூ, கள்ளை காளி-யம்மன் கோவில் சந்திரசேகர், கடம்பவனேஸ்வரர் கோவில் தீபா, நங்கவரம் சுந்தரரேஸ்வரர் கோவில் நரசிம்மன், ஆய்-வாளர்கள் மாணிக்கசுந்தரம், சிபிசக்கரவர்த்தி, மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை