வள்ளிஸ் கார்னர் வணிக வளாகம் பா.ஜ., மாநில தலைவர் திறப்பு
கரூர்: கரூரில், வள்ளிஸ் கார்னர் வணிக வளாகத்தை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.கரூர் மகாத்மா காந்தி நகர் வடக்கு, வையாபுரி நகர், 2வது கிராசில், வள்ளிஸ் கார்னர் வணிக வளாகம் திறப்பு விழா நேற்று நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், பா.ஜ., க.பரமத்தி தெற்கு ஒன்றிய தலைவருமான தங்கவேல் வரவேற்றார். முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் தளங்களில், 4,000 சதுரடி இடம் லிப்ட் வசதியுடன் உள்ளது. முன்னதாக வணிக வளாகத்தில், மஹா கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.