மேலும் செய்திகள்
அண்ணா நுாற்றாண்டு பூங்கா சீரமைக்க வலியுறுத்தல்
23-Aug-2024
கரூர்:கரூர்-வெள்ளியணை சாலை, தான்தோன்றி மலை அரசு குடியிருப்பு வளாகத்தில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், சிறுவர், சிறுமிகள் விளையாட வசதியாக, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்யவும் தனியாக சாதனங்களும் இருந்தன. இந்நிலையில், பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடிய வில்லை. அந்த பகுதியில், வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாததால், பூங்காவில் பழுதான உபகரணங்களை, உடனடியாக சரி செய்ய, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Aug-2024