உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகிளிப்பட்டி கிராமத்தில் குடிநீர் குழாயில் விரிசல்

மகிளிப்பட்டி கிராமத்தில் குடிநீர் குழாயில் விரிசல்

மகிளிப்பட்டி கிராமத்தில்குடிநீர் குழாயில் விரிசல்கிருஷ்ணராயபுரம், செப். 8-கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராம மக்களுக்கு, குழாய் மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் வழியாக வரும் நீரை மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களாக மகிளிப்பட்டி வாய்க்கால் சாலை அருகே செல்லும் குடிநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு தினமும் அதிமான காவிரி நீர் சாலையோரம் பள்ளங்களில் தேங்கி வருகிறது. இதனால், கிராம மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்கமால் மக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். எனவே, இந்த சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாய் விரிசலை சரி செய்து மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ