மேலும் செய்திகள்
வேலா யு தம் பா ளையம் அருகே குடிசை வீட்டில் தீ
06-Aug-2024
கரூர், ஆக. 29-வேலாயுதம்பாளையம் அருகே, வீட்டில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ஓனவாக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் பாலன், 45; இவர், சிமென்ட் அட்டை போடப்பட்ட வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இருந்தாலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயில் நாசமாயின. புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், பாலன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.தீ விபத்தால், ஓனவாக்கல் மேடு பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Aug-2024