உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆண்டிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஆண்டிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

அரவக்குறிச்சி,: லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் அரவக்குறிச்சி ஒன்-றிய ம.தி.மு.க., இணைந்து, நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்-டையில் நடைபெற்றது.முகாமில், கண் பார்வை குறைபாடுகள் கண்டறிதல், கண்புரை நோய், கண் நரம்பு சம்பந்தமான குறைபாடு, கண்ணீர் அழுத்த நோய், மாறு கண் சம்பந்தமான பரிசோதனை, தலைவலி சம்பந்த-மான கண் பரிசோதனை, துாரப்பார்வை, கிட்ட பார்வை கண்ட-றிதல் உள்ளிட்ட கண் சம்பந்தமான பரிசோதனைகள் நடந்தன. 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், நுாற்றுக்கும் மேற்பட்ட கண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தனர்.இந்நிகழ்வில் ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வரப்பட்டி பூபதி, மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் ஆசை சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை