உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூரில் அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு

புகழூரில் அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முதலாவது வட்டக்கிளை மாநாடு நடந்தது.வட்ட தலைவர் உமா மகேஸ்வரன் தலைமை வகித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தை ஒழித்து கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு மற்றும் பண பலன்களை பெற்றிட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.நிகழ்ச்சியில், மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட செய-லாளர் சுரேஷ்குமார், தலைவர் கருணாகரன், இணை செயலா-ளர்கள் குப்புசாமி, தனலட்சுமி, அரசகுமார் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !